Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

By : Thangavelu
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காற்றின் திசை மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்யக்கூடும். அரபிக்கடல் பகுதியில் பலமாக காற்று வீசும் என்பதால் ஜூலை 1ம் தேதி வரை கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story