Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக அடுத்து வருகின்ற 24 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  30 Jun 2021 3:31 PM IST

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒருசில பகுதிகளில மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.





இது பற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக அடுத்து வருகின்ற 24 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.




மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News