முழு ஊரடங்கில் அம்மா உணவகம் இயங்கும்.. தமிழக அரசு.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக, மே 10ம் தேதி முதல் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கின்போது அம்மா உணவகம் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக, மே 10ம் தேதி முதல் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கின்போது அம்மா உணவகம் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் நோய் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி பாதிப்பாக 20 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மே 10ம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே ஊரடங்கின்போது, சில வழிகாட்டு விதிமுறைகளுடன் அத்தியாவசிய கடைகள் இயங்க அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.