இன்று முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.!
இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்துகிறார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. கொரோனா பெருந்தொற்று சமயத்தில் நடைபெறும் கூட்டத்தொடரை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் மே 7ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் கடந்த மாதம் சட்டப்பேரவை கூடியதும், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவி ஏற்றுகொண்டனர். இதன் பின்னர் சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். அவரை சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை செயலாளர் சீனிவாசன் அழைத்து வருகின்றனர்.