Kathir News
Begin typing your search above and press return to search.

நெய்வேலி NLC-யில் தமிழர்களுக்கே முன்னுரிமை வேண்டும் - மத்திய அரசுக்கு எடுத்துச்சென்ற அண்ணாமலை

நெய்வேலி NLC-யில் தமிழர்களுக்கே முன்னுரிமை வேண்டும் - மத்திய அரசுக்கு எடுத்துச்சென்ற அண்ணாமலை
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 May 2022 7:53 AM IST

நெய்வேலி நிலக்கரி ஆலையில் அன்மையில் எக்ஸ்கியூட்டிங் ட்ரெயினிங் என்ற பணிக்கு சுமார் 300 காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் GATE தேர்வு எழுதியிருக்க வேண்டும் என்ற தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நெய்வேலி நிலக்கரி ஆலை தன்னுடைய நிலப்பரப்பளவை அதிகரிக்க அப்பகுதி மக்கள் தங்களுடைய நிலத்தை கொடுத்து பெரியளவில் உதவி அளித்துள்ளனர்.

நெய்வேலி நிலக்கரி ஆலைக்காக தங்களுடைய நிலத்தை கொடுத்து உதவிய உள்ளூர் மக்களுக்கு இந்த வேலை வாய்ப்புகள் இடஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான சமூகநீதியாகும். சமூகநீதியை தாரக மந்திரமாக கடைபிடிக்கும் பிரதமர் மோடியின் அரசும் தங்களும் இந்த விஷயம் தொடர்பாக நல்ல முடிவு எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News