Begin typing your search above and press return to search.
ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு.!
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
By : Thangavelu
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதனையடுத்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதன் கட்சித்தலைவரை சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
இதனையடுத்து இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
பதவி ஏற்பு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும், திமுக மூத்தலைவர்கள், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story