Kathir News
Begin typing your search above and press return to search.

அமைச்சராக பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் - பரிந்துரையை ஏற்றார் ஆளுநர்

அமைச்சராக பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் - பரிந்துரையை ஏற்றார் ஆளுநர்
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Dec 2022 8:22 AM IST

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் வருகின்ற 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியானது. இதற்கான கடிதம் இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உதயநிதிக்கு தலைமை செயலகத்தில் முழு வீச்சில் புதிய அறை தயாராகி வருகிறது. ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் டிசம்பர் 14 காலை 9:30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் 400 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு சிறப்பு திட்ட அமலாக்கத்துறை ஒதுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News