சென்னைக்கு ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்தடைந்தது.!
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சென்னை தண்டையார்பேட்டைக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்து சேர்ந்தது.
By : Thangavelu
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு பல்வேறு இடங்களில் இருந்து ஆக்சிஜனை தயார் செய்து அனுப்பி வருகுறது. அதனடிப்படையில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக சென்னை தண்டையார்பேட்டைக்கு 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்து சேர்ந்தது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இன்றி நோயாளிகள் இறக்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. அதே போன்று தமிழகத்திலும் நோயாளிகளின் எண்ணிக்கையால், உயிரிழப்புகள் அதிகளவு ஏற்பட்டது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், துர்காபூரில் இருந்து சென்னை தண்டையார்பேட்டை வந்து சேர்ந்த முதல் ஆக்சிஜன் ரயிலை தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர். இதனிடையே மற்ற மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் பிரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.