Begin typing your search above and press return to search.
கொரோனா பரவலில் இந்திய அளவில் 3ம் இடம் பிடித்த தமிழகம்: மத்திய சுகாதாரத்துறை தகவல்.!
தினமும் கொரோனா வைரஸ் தொற்று பரவலில் கர்நாடகா, மகாராஷ்டிரா அடுத்ததாக தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

By : Thangavelu
தினமும் கொரோனா வைரஸ் தொற்று பரவலில் கர்நாடகா, மகாராஷ்டிரா அடுத்ததாக தமிழகம் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது.
அதிகப்படியாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது.
Next Story
