கொரோனா விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் நடவடிக்கை.. சுகாதாரத்துறை செயலர் தகவல்.!
தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகள் மூலமாக தொற்று பரவுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறையும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை மாவட்டங்களில் கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.