தமிழகத்தில் காட்டுத்தீ போல பரவும் கொரோனா 2ம் அலை: இன்றைய பாதிப்பு நிலவரம்.!
இந்தியாவில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
By : Thangavelu
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை தினசரி 3 லட்சத்தை நெருங்கி வருகிறது.
இந்தியாவில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 11,681 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 25 ஆயிரத்து 59 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் 84,361 பேர் உள்ளனர். இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 6,973 பேர் ஆண்கள், 4,708 பேர் பெண்கள். இன்று தொற்றிலிருந்து 7,071 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்று 53 பேர் உயிரிழந்துள்ளனர். 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 21 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.