தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு இவ்வளவு உயருமா.. சிறப்பு அதிகாரி தகவல்.!
சென்னை பல்லவன் சாலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில், வாரம் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது.

By : Thangavelu
தமிழகத்தில் வருகின்ற நாட்களில் தினசரி பாதிப்பு 60 ஆயிரத்தை எட்டும் என்பதால், பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாக சிறப்பு அதிகாரி கூறியுள்ளார்.
சென்னை பல்லவன் சாலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில், வாரம் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த பின்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மருத்துவ கல்லூரி இயக்குநர் நாராயணபாபு, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் வீட்டுத் தனிமையில் இருப்பதாக அவர் கூறினார். இதன் பின்னர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசியதாவது: சென்னையில் முன்கள பணியாளர்கள் 619 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் உள்ளதாகவும், 90 விழுக்காடு முன்கள பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியிருந்தார்.
மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு பேசியதாவது: அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்து இருப்பு 100 சதவீதம் உள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தட்டுப்பாடு இருப்பதாகவும் மருத்துவக் கல்வி இயக்குநர் கூறினார்.
