தமிழகத்தில் இன்று மூன்று ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.!
By : Thangavelu
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒரு புறம் கொரோனா தடுப்பூசி போட்டு வந்தாலும், மறுபுறம் தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது. வெளியில் செல்லும்போது மக்கள் முககவசத்தை முறையாக பயன்படுத்தாமல் இருப்பதாலும் தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இன்று தமிழகத்தின் கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2,817 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 89 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 1,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் 8,59,709 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 12,738 ஆக அதிகரித்துள்ளது.