Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் இன்று 7000ஐ நெருங்கிய கொரோனா தொற்று.!

வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் உட்பட மொத்தம் 6,984 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 7000ஐ நெருங்கிய கொரோனா தொற்று.!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 April 2021 7:24 PM IST

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இருந்தாலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையே தொடர்கிறது.





இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் உட்பட மொத்தம் 6,984 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 47 ஆயிரத்து 129ஆக உயர்ந்துள்ளது. சிகிச்¬யில் இருப்பவர்கள் எண்ணிக்கை 49,985ஆக உயர்ந்துள்ளது.





இன்று தொற்று பாதித்தவர்களில் 4,203 பேர் ஆண்கள், 2,781 பெண்கள் ஆவார்கள். தமிழகம் முழுவதும் 262 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதே போன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 8 பேர் தனியார் மருத்துவமனையிலும், 10 பேர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News