Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!

தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டாலும் தொற்று பரவல் குறையவில்லை. இதனால் நாளை தலைமைச் செயலாளர் அவரச ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 April 2021 7:58 PM IST

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்று 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக மோசமாக பரவி வருகிறது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் பல மடங்காக உயர்ந்து வருகிறது.





தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. அதே போன்று தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டாலும் தொற்று பரவல் குறையவில்லை. இதனால் நாளை தலைமைச் செயலாளர் அவரச ஆலோசனை மேற்கொள்கிறார். நாளை முக்கிய அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது.





இந்நிலையில், இன்று (ஏப்ரல் 15) 7,987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 2,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,999 ஆக உயர்ந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News