Kathir News
Begin typing your search above and press return to search.

மேலும் உயர இருக்கும் விலைவாசி... இனிமேல் தாங்க முடியாது என கதறும் குடும்பத் தலைவிகள்!

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு காரணமாக தமிழகத்தில் விலைவாசி மேலும் உயரக்கூடும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் உயர இருக்கும் விலைவாசி... இனிமேல் தாங்க முடியாது என கதறும் குடும்பத் தலைவிகள்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 April 2023 1:01 AM GMT

தமிழகத்தில் நாளுக்கு நாள் விலைவாசி ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு பெருமளவில் நீடித்து வந்தது. அந்த வகையில் தற்பொழுது சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு காரணமாக விலைவாசிகளும் உய ரக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்த ஒரு தகவல் குடும்பத் தலைவிகள் மீது பெரும் சுமையை ஏற்றி வைத்திருக்கிறது என்று ஏளனமான கவலைகளை பல்வேறு தரப்பினரும் பதிவு செய்து வருகிறார்கள்.


நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் 5 முதல் 10 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி சுங்க சாவடிகளின் கட்டண உயர்விற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்க சாவடிகளில் நேற்று முன்தினம் முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 460 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு தரப்பில் சுங்கச்சாவடிகளில் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதன்படி கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணம் 95க்கு பதிலாக நேற்று ஐந்து ரூபாய் உயர்ந்து புதிய கட்டணம் நூறு வசூலிக்கப்பட்டு வருகிறது. மினி பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணம் 155 வசூலித்து வந்த நிலையில் தற்போது பத்து ரூபாய் உயர்த்தப்பட்டு 165 புதிய கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் பஸ் லாரி உள்ளிட்ட கடராக வாகனங்களுக்கு பழைய கட்டணம் 325 ரூபாயிலிருந்து ரூபாய் 20 உயர்த்தி உயிர் புதிய கட்டணமாக ரூபாய் 345 உயர்த்தப்பட்டிருக்கிறது.


கனரகப் பெரிய வாகனங்களுக்கு பழைய கட்டணம் 510 லிருந்து 30 ரூபாய் உயர்த்தப்பட்டு 540 ஆக உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் சுங்க சாவடி நிர்வாகம் ஏற்கனவே இருந்தது. இந்த ஒரு கட்டண உயர்வு காரணமாக ஒரு மாநிலங்களில் இருந்து மற்றொரு மாநிலங்களுக்கு கொண்டுவரப்படும் காய்கறிகள் மற்றும் இதர பொருட்களுக்கு கட்டணம் உயரும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக விரைவில் விலைவாசி மேலும் உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து.

Input & Image courtesy: Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News