Begin typing your search above and press return to search.
தமிழகம்: கடந்த 5 மாதங்களில் 2,008 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு.!
டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற ஏடிஸ்எஜிப்டி வகை கொசுக்கள் மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக பெருகுகிறது. கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் 8527 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

By : Thangavelu
டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற ஏடிஸ்எஜிப்டி வகை கொசுக்கள் மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக பெருகுகிறது. கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் 8527 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
2020ம் ஆண்டில் டெங்கு பாதிப்பு விகிதம் 75 சதவீதம் குறைந்தது. அந்த ஆண்டில் 2,410 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருமே குணமடைந்து விட்டனர். அதே போன்று இந்த ஆண்டில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 2008 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் 2008 பேர் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் ஒருவர் கூட டெங்குவால் உயிரிழப்பு ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
Next Story