தமிழக பட்ஜெட்டில் மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான்: உண்மையை உடைத்த பா.ஜ.க MLA வானதி சீனிவாசன்!
தமிழக பட்ஜெட்டில் தமிழக மக்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருப்பதாக பா.ஜ.க எம்.எல்.ஏ கருத்து.
By : Bharathi Latha
மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடிய ஒரு தொலைநோக்கு இல்லாத பட்சத்தை தான் தற்பொழுது விடியல் அரசு தாக்கல் செய்து இருப்பதாக பா.ஜ.க எம்.எல்.ஏ கோவை தெற்கு தொகுதி வானதி சீனிவாசன் அவர்கள் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழகத்தில் தி.மு.க அளித்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக குடும்பத் தலைவி அனைவருக்கும் மாதம் ஆயிரம் என்று உரிமைத்தொகை வழங்கப்படும் என்று 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தனது வாக்குறுதியாக அளித்தது. தி.மு.க தேர்தலின் போது தி.மு.க அளித்த வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக இரண்டு ஆண்டுகள் ஆகியும் மகளிருக்கான உதவி தொகை தற்போது வரை கிடைக்கப்பெறவில்லை. தொடர்ச்சியான வகையில் எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் இது குறித்து கேள்வி எழுப்பு வரும் நிலையில் தி.மு.க அரசு தற்போது முக்கிய முடிவு எடுப்பதாக கூறி செப்டம்பர் 15 முதல் தகுதி உள்ள குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. எந்த அடிப்படையில் இந்த தகுதியை குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று இதுவரை சொல்லப்படவில்லை. இத்திட்டத்திற்கு 7000 கோடி ஒடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பாதி குடும்ப தலைவிகளுக்கு இந்த ஒரு ஆயிரம் உதவித்தொகை கிடைக்காது. இது நடுத்தர மக்களுக்கு இழக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும். மேலும் விவசாய தொழிலாளர்களுக்கும் பெரியவிதமான முன்னேற்றம் கிடையாது. வளர்ச்சிக்கான திட்டமிடல் பணிகள் எதுவும் இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
அடுத்ததாக இந்து கோவில்கள் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பள்ளிகள் மற்றும் இந்து சமய கல்வி இருக்க வேண்டும். மற்ற மத நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில் அந்தந்த மதங்களின் பிரார்த்தனை பாடல்களுடன் பள்ளிகள் துவங்குகிறது. அது போல இந்து சமய இந்து கோவில்களின் நிதியில் துவங்கப்படும் பள்ளிகளில் இந்து சமயக் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். கடனை குறைக்காமல் தமிழகத்திற்கு மேலும் கடனை அதிகரிக்கும் ஒரு செயலாகவே பட்ஜெட் அமைந்து இருக்கிறது. எனவே தி.மு.க அரசு மக்களுக்கு ஏமாற்றும் அளிக்கும் வகையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
Input & image courtesy: Dinamalar News