Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா 2வது அலை எதிரொலி: மின் வாரிய தேர்வுகள் ஒத்திவைப்பு.!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக வேகமாக வீசத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கொரோனா 2வது அலை எதிரொலி: மின் வாரிய தேர்வுகள் ஒத்திவைப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  17 April 2021 6:10 PM IST

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக வேகமாக வீசத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

அதே போன்று தமிழகத்திலும் கடந்த ஒரு வாரமாக தொற்று எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்து செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனாலும் தொற்று எண்ணிக்கை குறைந்த பாடில்லை வேகமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே ஏப்ரல் 24ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை நடைபெற இருந்த மின்வாரிய உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான கணினி வழித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மீண்டும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்று காரணமாக 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News