கல்வித்துறை அமைச்சருக்காக அதிகாரிகள் நடத்திய நாடகம்: குழம்பும் 680 தலைமை ஆசிரியர்கள்?
தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகம்.
By : Bharathi Latha
கல்வித்துறை அதிகாரிகளின் திடீர் அறிவிப்பு காரணமாக சென்னைக்கு படையெடுத்த தலைமை ஆசிரியர்கள் அவசர அவசரமாக சென்னைக்கு சென்று கூட்டத்தில் பங்கேற்று பிறகு தான் தெரியவந்தது, அது கல்வித்துறை அமைச்சருக்காக கல்வி அதிகாரிகள் அவர்களால் நடத்தப்பட்ட நாடகம். இன்று தமிழக முழுவதும் குறிப்பிட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 680 பேருக்கு அந்த மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக டிசம்பர் 14ஆம் தேதி காலை 10:30 மணிக்குள் சென்னை கோட்டூர் புறம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்த தகவலில் அதிகாரிகள் எதற்கு தலைமை ஆசிரியர்களை அழைக்கிறார்கள்? என்று விவரம் தெரிவிக்கப்படாமல் இருந்தது. சமீபத்தில் நடந்த பொதுத் தேர்வு தேர்ச்சி பற்றிய ஆய்வுக் கூட்டமாக இருக்குமா கூட்டமாக இருக்குமா? என்று தகவல்கள் தலைமையாசிரியர்களுக்கு இடையே பரவியது.
ஆனால் பாடம் வாரியாக அதனால் இதற்காக பாடும் வகையான விவரங்களை சேகரித்து ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர்களும் ரயில், பஸ் மூலமாக அடித்து பிடித்து சென்னைக்கு சரியான நேரத்தில் சென்று கூட்டத்தில் பரபரப்பான மனநிலையுடன் கலந்து கொண்டார்கள். ஆனால் அங்கு வந்த இணை இயக்குனர்கள் ஜெயக்குமார், ராமசாமி நரேஷ் ஆகியோர் விளக்கமான கல்வித்துறை ஆய்வுக்கூடங்களில் அறிகுறிகளை மட்டுமே பேசிவிட்டு இது தேர்வு சதவீத குறித்த கூட்டம் இல்லை,உங்களை கண்டிக்கப் போவதும் இல்லை என பேசி இருக்கிறார்கள். அப்போது தேர்ச்சி குறித்த ஆய்வுக்கூடம் இல்லை என்றால்? பின் எதற்கு அழைக்கப்பட்டோம் என்பது தெரியாது தலைமை ஆசிரியர்கள் குழப்பத்திற்கு சென்றார்கள். மதியம் சாப்பாடு தயாராகிவிட்டது சாப்பிட்டு வாருங்கள் என்று வலியுறுத்தலின் பெயரில் பகல் 3 மணிக்கு பிறகு கல்வி அமைச்சர் மகேஷ் திடீரென்று அந்தக் கூட்டத்திற்கு வருகை தந்தார்.
குறிப்பாக அவர் கூறுகையில், வரும் ஜனவரி 6ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் இலக்கிய விழா நடத்தப்படுகிறது. அதில் உங்கள் ஒத்துழைப்பு வேண்டும் என்று பேசிவிட்டு அந்த விழாவில் கால லோகோவை வெளியிட்டார். அப்பொழுதுதான் தலைமை ஆசிரியர்களுக்கு தெரியவந்தது, இது தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கையை அமைச்சருக்கு காட்ட ஏற்பாடு செய்து கூட்டம் என்று கடைசி நேரத்தில் இதற்காகத்தான் அழைக்கப்பட்டு இருக்கிறோம் என்று கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு உணர்த்தினார்கள். இதனால அதிகமான உளைச்சலுக்கு தலைமை ஆசிரியர்கள் 680 பேர் ஆளாகும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamalar