தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு: இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்.!
தமிழகம் முழுவதும் நாளை தளர்வுள் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

By : Thangavelu
தமிழகம் முழுவதும் நாளை தளர்வுள் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகளில் காலை முதலே மக்கள் கூட்டம் அலை மோதியது. கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது.
பல்வேறு மாவட்டங்களில் மக்கள் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றி வருகின்றனர். போலீசாரிடம் பழைய திருமண அழைப்பிதழ் காண்பித்துவிட்டு செல்லும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. இதனையடுத்து நேற்று முதல் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளை தவிற மற்ற நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் இன்று காலை முதல் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக அலை மோதி வருகின்றனர்.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பலரும் இறைச்சி கடைகளில் முண்டியடித்து வாங்கி செல்வதை காணமுடிகிறது. தங்களின் உயிர்களை பற்றி கவலைப்படாமல் இறைச்சி கடைகளில் ஒரே நேரத்தில் பல நூறு பேர் குவிவதால் தொற்று பரவல் அதிகரிக்கவே செய்யும். எனவே அரசு பிறப்பித்த உத்தரவுகளை பொதுமக்கள் மதித்து நடந்தால் அனைவருக்கும் நல்லது.
