கொரோனா அதிகரிப்பால் அரசு உத்தரவுகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.!
மத வழிப்பாட்டு தளங்களுக்கு தடை. மற்றும் சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி.
By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது.
மத வழிப்பாட்டு தளங்களுக்கு தடை. மற்றும் சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி. ஆட்டோக்களில் டிரைவர் உட்பட 3 பேர் மட்டுமே இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
மேலும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இபாஸ் முறை கட்டாயம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தியுள்ளார். தொற்று அதிகரித்து வருவதால் கட்டாயம் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
தற்போது கொரோனா தொற்றின் 2ம் அலை காரணமாக முதியவர்களை குடும்பத்தார் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தகுதி உடைய அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.