Kathir News
Begin typing your search above and press return to search.

சிதம்பரம் அருகே பேருந்து மீது லாரி மோதல்.. 3 பேர் உயிரிழப்பு.. 20 பேர் படுகாயம்.!

கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற மீன் லாரி எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது நேருக்கு நேராக மோதியது.

சிதம்பரம் அருகே பேருந்து மீது லாரி மோதல்.. 3 பேர் உயிரிழப்பு.. 20 பேர் படுகாயம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  8 April 2021 6:16 AM GMT

சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே பேருந்து, மினி லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் இருந்து நேற்று இரவு தமிழ்நாடு அரசு சொகுசு பேருந்து சென்னை நோக்கி ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 2 மணியளவில் பேருந்து, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற மீன் லாரி எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது நேருக்கு நேராக மோதியது. இதில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் 42, மற்றும் பேருந்தில் பயணம் செய்த நாகப்பட்டினத்தை சேர்ந்த அன்பரசன் 34, வைரவன் 20 ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.





இது பற்றி தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த 20 பயணிகளில் 16 பயணிகள் கடலூர் அரசு மருத்துவமனையிலும் 4 பயணிகள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் செல்லும் வாகனங்கள் மிகவும் பொறுமையுடனும், வேகம் குறைவாக ஒட்டிச் சென்றால் விபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News