அதிகரிக்கும் புதிய பார்களின் எண்ணிக்கை... தமிழகத்தில் மது பிரியர்களுக்கு தான் முன்னுரிமையா?
தி.மு.க ஆட்சியில் மாதம் புதிதாக 54 புதிய பார்கள் திறக்கப்படுகிறது.
By : Bharathi Latha
தமிழகத்தில் மட்டும் நாளுக்கு நாள் புதிய டாஸ்மார்க் களின் எண்ணிக்கை தொடர்ச்சியான வண்ணம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மூலை, முடுக்கிலும் புதிது, புதிதாக பார்கள் ஓபன் செய்யப்பட்டு மது பிரியர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக வண்ணம் அதிகரித்து வருகிறது தி.மு.க தலைமையிலான அரசு. ஆனால் பொது மேடைகளில் அவர்கள் பேசும் போது, தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்குப் பிறகு தான் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை முற்றிலுமாக குறைக்கப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக எங்கள் ஆட்சியின் மூலம்தான் பெருமளவு பார்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால் உண்மையான நிலவரம் என்னவென்றால் தி.மு.க ஆட்சியின்போது தான் தமிழகத்தில் புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஏனெனில் அரசுக்கு அதிகமான வருமானம் டாஸ்மாக் கடைகளின் மூலமாக கிடைக்கிறது. மற்ற துறைகளை காட்டிலும் இந்த துறைக்கு அரசு அதிக முக்கியத்துவம் தருவதும், குறிப்பாக தி.மு.க ஆட்சியில் மது பிரியர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதும் வெளிப்படையாகவே தெரிய வந்து இருக்கிறது.
இது தொடர்பாக பா.ஜ.க ஆதரவாளர் செல்வகுமார் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் இது பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். தமிழகத்தில் கடந்த ஆண்டுகளாக திறக்கப்பட்ட மொத்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை, ஜூலை 2021 - 2808, மார்ச் 2022 - 3240 (8 மாதத்தில் 432 புதிய பார்கள், மாதம் 54 புதிய பார்கள்), மார்ச் 2023 - தகவல் மறுக்கபட்டுள்ளது.
Input & Image courtesy: Twitter