Begin typing your search above and press return to search.
27 மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்புடன் மதுவிற்பனை தொடங்கியது.!
தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்புடன் மதுவிற்பனை தொடங்கியுள்ளது.

By : Thangavelu
தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்புடன் மதுவிற்பனை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த சமயங்களில் அரசு மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனிடையே புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதில் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று 27 மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை வாங்குவதற்காக மதுபிரியர்கள் காலை முதலே கடை வாசலில் காத்துகிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல் இன்னும் குறையாத சமயத்தில் மதுக்கடைகளை அரசு திறந்திருப்பது மீண்டும் தொற்று அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story
