Begin typing your search above and press return to search.
நாளை முதல் அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு.!
வீட்டில் பணியாற்றும் ஊழியர்கள் தேவையின் அடிப்படையில் பணிக்கு வர உத்தரவு பிறப்பித்தால் உடனடியாக பணிக்கு வரவேண்டும் எனவும், அனுமதியின்றி வெளி மாவட்டத்திற்கு செல்லக்கூடாது எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் நாளை முதல் அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வரவேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குரூப் ஏ பிரிவில் உள்ள அரசு அதிகாரிகள் மட்டும் அனைத்து நாட்களும் பணிக்கு வரவேண்டும் என்றும், மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் அல்லது வீட்டில் இருந்து பணியாற்றலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டில் பணியாற்றும் ஊழியர்கள் தேவையின் அடிப்படையில் பணிக்கு வர உத்தரவு பிறப்பித்தால் உடனடியாக பணிக்கு வரவேண்டும் எனவும், அனுமதியின்றி வெளி மாவட்டத்திற்கு செல்லக்கூடாது எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.
Next Story