Kathir News
Begin typing your search above and press return to search.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் குவாரிகளை மூட நடவடிக்கை: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உறுதி!

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வெளியே ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் அமைக்கப்படும் குவாரிகளை மூட நடவடிக்கை.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் குவாரிகளை மூட நடவடிக்கை: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உறுதி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Dec 2022 3:09 AM GMT

தொழில் வர்த்தக சபை சார்பில் பெரு நகரங்களுக்கான நகர பூஜ்ஜியமாக உமிழ் திட்டமிடல் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தொடங்கி வைத்த அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டார். தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் 13 ஆயிரத்து 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பசுமையை பரப்பில் ஏற்படுத்த ஆண்டுகளுக்கு 10 கோடி மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.


மேலும் சதுப்பு காடுகள் மற்றும் சரணாலயங்கள் அறிய சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் குவாரிகள் அமைக்கக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால் அப்பகுதியில் இதற்கு முன்பு குவாரிகள் அனுமதி வழங்கப்பட்டிருந்தால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றை மூட தற்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து இருக்கிறார்.


தமிழக அரசின் சார்பில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்ட மசோதாவை அரசாணையை திருத்தம் செய்ய இருப்பதாகவும், மின்சார பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: https://m.dinamalar.com/detail.php?id=3200724

Next Story
கதிர் தொகுப்பு
Trending News