"பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும்" - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கவும், கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை அரசு முழுமையாக எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கவும், கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை அரசு முழுமையாக எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு வேலை பாதிப்பு ஏற்பட்டாலும், அரசு சார்பில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை ஓய்ந்து வரும் நிலையில், மீண்டும் 3வது அலைக்கு கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Source: Polimer
Image Courtesy: The Hindu
https://www.polimernews.com/dnews/152018/மக்களின்-ஒத்துழைப்புஇல்லாவிட்டால்-கொரோனாவைக்கட்டுப்படுத்த-முடியாது:சுகாதாரத்துறை-செயலாளர்