Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்.!

கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை இருப்பதால், பகல் நேர வெப்பநிலை 9 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்.!

ThangaveluBy : Thangavelu

  |  22 April 2021 1:28 PM GMT

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்து இரண்டு நாட்களுக்கு பகல் நேர வெப்பநிலை அதிகமாக உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை இருப்பதால், பகல் நேர வெப்பநிலை 9 டிகிரி பாரன்ஹீட் வரை உயரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.




மேலும், பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாற்றாகவும் வியர்க்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர் மற்றும் மோர் உள்ளிட்ட நீர்ச்சத்து மிகுந்து காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும் என்றும், வெள்ளை மற்றும் வெளிறிய வண்ண கதர் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News