தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை.!
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. சென்னையில் பல இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. வடபழனி, குரோம்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

By : Thangavelu

மேலும், திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது. அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் கனமழை கொட்டித்தீர்த்தது. விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் வத்திராயிருப்பு, சதுரகிரி மலைப்பகுதியிலும் அரை மணி நேரம் கனமழை பெய்தது. இன்று அமாவாசை என்பதால் சதுரகிரி கோயிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. மதுரையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இன்றும் தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.