இந்த மாவட்டங்களில் கொரோனா அதிகமாக உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.!
சென்னையில் மட்டும் 11 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் பாதிப்பு அளவு 3 சதவீதம்தான்.
By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருண்ணன், ''அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் மட்டும் 11 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் பாதிப்பு அளவு 3 சதவீதம்தான். சென்னையில் உள்ள விக்டோரியா மாணவர் விடுதியில் 570 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, தஞ்சாவூரில் ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளது.