தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் கொரோனா தொற்று: முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்.!
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று தினமும் 100க்கும் கீழாக இருந்தது. ஆனால் கடந்த ஒரு சில வாரங்களாக தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
By : Thangavelu
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று தினமும் 100க்கும் கீழாக இருந்தது. ஆனால் கடந்த ஒரு சில வாரங்களாக தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனை கட்டுப்படுத்த அனைவரும் முககவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று முதல் முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதை முன்னிட்டு அதனை தீவிரமாக கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட வாரியாக தலைமைச் செயலர் ராஜீவ்சஞ்சன் ஆய்வு நடத்தினார்.
இந்த கூட்டத்தில் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி, நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இன்று முதல் முககவசம் அணியாமல் சென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.