தமிழகத்தில் இன்று வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.. அனல்காற்று வீசும்.. பொதுமக்களே உஷார்.!
முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்த வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
By : Thangavelu
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலையானது இயல்பைவிட 4ல் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்த வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது பற்றி வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை தரைக்காற்று, வடமேற்கு திசையிலிருந்து தமிழகத்தை நோக்கி வீசுவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 4ல் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் அரசியல் பிரமுகர்களும் பிரச்சாரங்களை மாலைக்கு ஒத்தி வைத்தால் வாக்காளர்களுக்கும், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் நல்லது.