Kathir News
Begin typing your search above and press return to search.

மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம்: புதிய உத்தரவை வெளியிட்ட தமிழக அரசு.!

வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் வருவாயை அதிகரிக்கின்ற வகையில், சித்திரை முதல் நாள் மற்றும் ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் உள்ளிட்ட மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகம் திறந்திருக்கும்.

மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம்: புதிய உத்தரவை வெளியிட்ட தமிழக அரசு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 April 2021 4:31 PM IST

சித்திரை முதல் தேதி ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் உள்ளிட்ட மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்யும் பட்சத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இது பற்றி வணிக வரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலர் பீலா ராஜேஷ் கூறியிருப்பதாவது: வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் வருவாயை அதிகரிக்கின்ற வகையில், சித்திரை முதல் நாள் மற்றும் ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் உள்ளிட்ட மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகம் திறந்திருக்கும்.





எனவே அந்த நாட்களில் பொதுமக்கள் சென்று கூடுதல் கட்டணம் செலுத்தி தங்களது சொத்துக்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News