Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் ஒருவாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு.!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஒருவாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  28 May 2021 6:38 PM IST

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்து வருகிறது.





இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.




இந்நிலையில், வருகின்ற 31.05.2021 அன்று காலை 6 மணியுடன் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், அதனை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 7.06.2021 காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்போது, சில தளர்வுகள் இருக்கும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News