தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.!
தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அடுத்த மாதம் வரை நீடிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
By : Thangavelu
நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்ட அன்று முதல் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அடுத்த மாதம் வரை நீடிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மருத்துவ நிபுணர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில் கூடிய பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.