Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: டாஸ்மாக், திரையரங்குகளை மூடக்கோரி வழக்கு.!
தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் பார், மற்றும் வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை மூட உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

By :
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளை அரசு விதிக்கலாமா என்று ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், டாஸ்மாக் பார், திரையரங்குகள், வழிபாட்டு தலங்களை மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது பற்றிய மனுவில், கடந்த பிப்ரவரிக்கு பின்னர் வைரஸ் தொற்று அதிரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் பார், மற்றும் வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை மூட உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு என்ன முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை.
Next Story