Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் 8 மெடிக்கல் காலேஜ் டீன்கள் இடமாற்றம்.!
தமிழகத்தில் 8 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்கள் இடமாற்றம் செய்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
By : Thangavelu
தமிழகத்தில் 8 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்கள் இடமாற்றம் செய்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது பற்றிய விவரம் வருமாறு: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு சாந்தி மலர், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு சங்குமணி, மதுரை அரசு மருத்துவ கல்லூரிக்கு ரத்தினவேல், திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முருகேசன், குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரிக்கு சத்தியமூர்த்தி, விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சுகந்தி ராஜகுமாரி, கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு திருவாசகமணி ஆகியோர் டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சேலம் அரசு மருத்துவ கல்லூரி டீனாக வள்ளி சத்தியமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Next Story