தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.!
திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.
By : Thangavelu
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு விதித்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழக முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவித தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக பின்பற்றப்படும்.
திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.
மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
பேருந்துகளில் நின்று செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இருக்கையில் அமர்ந்து மட்டுமே செல்ல வேண்டும்.
முககவசம் இல்லாமல் வெளியே வந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். மேலும், சென்னை மாநகரங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டாயம் இபாஸ் எடுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.