Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகம்: ஊரடங்கால் 1 கோடி கறிக்கோழிகள் தேக்கம்: உற்பத்தியாளர்கள் வேதனை.!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் ஓட்டல்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோழிகள் விற்பனை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

தமிழகம்: ஊரடங்கால் 1 கோடி கறிக்கோழிகள் தேக்கம்: உற்பத்தியாளர்கள் வேதனை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  26 Jun 2021 6:30 PM IST

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஒரு கோடி கறிக்கோழிகள் தேக்கம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கறிக்கோழி கிலோ ஒன்றுக்கு 16 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனால் 7000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் ஓட்டல்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோழிகள் விற்பனை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதே போன்று தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு கோடி கோழிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் தீவனப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால், பெரும் இழப்பை தவிர்க்க விலையை குறைத்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News