Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு.!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

By : Thangavelu
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
அன்று இரவு மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வாக்கு எந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மே 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக தமிழக போலீசார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களில் ஒரு லட்சம் போலீசார் வாக்கு எண்ணும் அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
Next Story
