தமிழகம், புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை!
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.
By : Thangavelu
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவ: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏனைய இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். கடலூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
மேலும், நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பெய்யும்.
Source: Dinamalar
Image Courtesy: Dinamalar
https://www.dinamalar.com/news_detail.asp?id=2828384