Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியிருப்பதால், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை தவிர்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு  மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  28 April 2021 11:26 AM IST

வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த வருகின்ற 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியிருப்பதால், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News