தமிழகத்தில் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!
வளிமண்டல சுழற்சி காரணமாக, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
By : Thangavelu
வளிமண்டல சுழற்சி காரணமாக, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது பற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, புதுக்கோட்டை, தென்காசி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
மேலும், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இதனிடையே வருகின்ற 14ம் தேதி தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் மாலத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இதனால் மீனவர்கள் மாலத்தீவு பகுதிக்கு 3 நாட்கள் செல்லம் வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.