Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

அரபிக்கடலில் உருவான டவ்தே புயல், கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் அதிகப்படியான மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  19 May 2021 12:14 AM GMT

அரபிக்கடலில் உருவான டவ்தே புயல், கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் அதிகப்படியான மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று (19ம் தேதி) முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.




அதன்படி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.





அதேபோன்று நாளை மற்றும் மறுநாள் (வெள்ளிக்கிழமை) வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும். 22ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்ளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News