தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.!
வருகின்ற 22ம் தேதி நீலகிரி, கோவையில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

By : Thangavelu
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது பற்றி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அடுத்து 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யலாம்.
மேலும், வருகின்ற 22ம் தேதி நீலகிரி, கோவையில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அது மட்டுமின்றி வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும். அரபிக் கடல் பகுதிகளில் 5 நாட்களுக்கும், தமிழக கடலோரம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு நாளை முதல் 4 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
