Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் நள்ளிரவு முதல் அமலாகும் முழு ஊரடங்கு: 16 சிறப்பு ரயில்கள் ரத்து.!

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் அமலாகும் முழு ஊரடங்கு காரணமாக மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நள்ளிரவு முதல் அமலாகும் முழு ஊரடங்கு: 16 சிறப்பு ரயில்கள் ரத்து.!
X

ThangaveluBy : Thangavelu

  |  24 April 2021 10:45 AM IST

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் அமலாகும் முழு ஊரடங்கு காரணமாக மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது.





கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நள்ளிரவு ஊரடங்கு தொடர்வதால், நாளை ஞாயிறு என்பதாலும், திங்கட்கிழமை காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.





இந்நிலையில், நீண்ட தூரம் செல்லக்கூடிய அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழக்கம் போல இயக்கப்படும் எனவும், மெட்ரோ ரயில் சேவை நாளை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 16 பயணிகள் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரயில்களும் நாளை ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.





அதன்படி, எழும்பூர் - புதுச்சேரி, திருச்சி - கரூர், திருச்சி - காரைக்கால், விழுப்புரம் - மதுரை ஆகிய பகுதிகளுக்கு இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் ரயில்கள் இரு மார்க்கமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கொல்லம் - ஆழப்புழா, ஆழப்புழா - கொல்லம், அரக்கோணம், ஜோலார்பேட்டை - காட்பாடி, உள்ளிட்ட 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News