Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டப்பேரவை கூடுவதை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலாலுடன் சபாநாயகர் சந்திப்பு.!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த 11 மற்றும் 12ம் தேதி நடைபெற்றது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

சட்டப்பேரவை கூடுவதை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலாலுடன் சபாநாயகர் சந்திப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Jun 2021 6:00 PM IST

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகின்ற 21ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு இன்று சந்தித்து பேசினார். அப்போது, பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததை தொடர்ந்து திமுக ஆட்சியை பிடித்தது. இதனால் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த 11 மற்றும் 12ம் தேதி நடைபெற்றது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் முதன் முதலாக சட்டப்பேரவை கூட்டம் வருகின்ற 21ம் தேதி தொடங்க உள்ளது. 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால், அன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்ற முறைப்படி அழைப்பு விடுத்தார். ஆளுநரும் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News