Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக டான்டீ விவகாரம் - அண்ணாமலை போராடிய பத்தே நாளில் பொட்டிப்பாம்பாய் நிறுத்தி வைத்த தி.மு.க அரசு

தமிழக தேயிலைத் தோட்ட நிறுவனம் வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவு பா.ஜ.க போராட்டத்திற்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழக டான்டீ விவகாரம் - அண்ணாமலை போராடிய பத்தே நாளில் பொட்டிப்பாம்பாய் நிறுத்தி வைத்த தி.மு.க அரசு
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Dec 2022 8:02 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தலைமை இடமாகக் கொண்ட டான்டீ என்னும் தமிழகத்தை இணைத்தோட்ட நிறுவனம் நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் 10 ஆயிரத்து 949 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 3,800 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்நிறுவனம் கடந்த 2008இல் இருந்து 211 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதை அடுத்த கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி கடும் நிதி நெருக்கடியில் இயங்கி வரும் இந்த நிறுவனம் 5318 ஏக்கர் நீளம் மீண்டும் வனத்துறை வசம் ஒப்படைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூரில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி பா.ஜ.க சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டான்டீ நிறுவனத்தை செய்து செயல்படுத்த முடியாது என தமிழக அரசு தெரிவித்தால் மத்திய அரசு எடுத்து நடத்தும் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் சவால் விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து பணிபுரிந்து ஓய்வு பெற்ற 677 ஊழியர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்து பயனாளிகள் பங்களிப்பு தொகையான 13.46 கோடி ஏற்பதாக தமிழக அரசு அறிவித்தது.


இந்நிலையில் நேற்று குன்னூர் தமிழகத்தைச் சேர்ந்த தோட்ட தொழிற்சாலையில் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைமையிலான ராஜா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு செய்தார்கள். இதில் தலைவர் ராஜா அவர்கள் பத்திரிகையாளர்களிடம் பேசும் பொழுது, டான்டீ பகுதிகளில் ஆய்வு செய்து கருத்துக்கள் முழுமையாக கேட்கப்படும் வனத்துறைக்கு இவர் வனத்துறைக்கு ஒப்படைக்கும் முடிவு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News