தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்படுமா? அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் தொற்று எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்து பதிவாகிறது.
By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் தொற்று எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்து பதிவாகிறது.
இதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி மற்றும் படுக்கைகள் கிடைக்காமல் பலர் அவதியுற்று வருகின்றனர். இதனால் மேலும், மேலும் தொற்று எண்ணிக்கை பரவிக்கொண்டே சென்றால் மருத்துவமனைகளும் இருக்காது, வைத்தியம் பார்க்க மருத்துவர்களும் பற்றாக்குறை ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் 24-ஆம் தேதிக்கு பின்னர் ஒரு வாரம் தளர்வுகள் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையொட்டி இன்றும், நாளை (மே 23) அனைத்து கடைகளும் திறக்கப்படும் என அரசு அறிவிப்பில் கூறியுள்ளது. ஆனால் மதுபானக்கடை திறக்கப்படாது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் மதுபிரியர்கள் மிகுந்த சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிகமான விலைக்கு வழக்கமாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.